3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தஞ்சையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரேஷன் அரிசி
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தஞ்சை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை நடத்தி, பிற மாவட்டங்களுக்கு கடத்தப்படும் ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் தஞ்சை கீழவாசல் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தஞ்சை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
69 மூட்டைகள்
இதன்பேரில் போலீசார் தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் திடீரென சோதனை நடத்தினர். சோதனையில் அங்கு .
மொத்தம் 69 மூட்டைகளில் 3 ஆயிரத்து 450 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த ரேஷன் அரிசி எங்கிருந்து, எப்படி கிடைத்தது என போலீசார் விசாரித்தபோது, பொதுவினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் அரிசியை குறைந்த விலைக்கு சிலர் வாங்கி வந்து வெளிமாவட்டங்களுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இது தொடர்பாக தலைமறைவாக உள்ள நபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி நுகர்பொருள் வாணிபக்கழக அரசு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.