காரைக்குடி,
சாக்கோட்டை போலீஸ் சரகம் மித்திராவயல் பகுதியை சேர்ந்தவர் நல்லசாமி. இவர் தனது அண்ணன் மகன் அய்யப்பனை வளர்த்து வந்தார். அய்யப்பன் அப்பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இவனுக்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அய்யப்பனை காணவில்லை. பல்வேறு இடங்களில் ேதடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கண்மாயில் மாணவன் அய்யப்பன் பிணமாக மிதந்தான். இதுகுறித்து சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பன் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.