ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி கட்டும் இடத்தை வீட்டு வசதிக்கழக தலைவர் ஆய்வு

வேதாரண்யத்தில் ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி கட்டும் இடத்தை வீட்டு வசதிக்கழக தலைவர் ஆய்வு செய்தார்.

Update: 2022-03-06 17:10 GMT
வேதாரண்யம்:
தமிழக அரசின் சார்பில் வேதாரண்யத்தில் ரூ.1 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன்  ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி கட்டப்பட உள்ளது. இந்த இடத்தை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக தலைவர் மதிவாணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆதிதிராவிட மாணவர்களை பாதுகாக்கும் வகையில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது வேதாரண்யம் நகரமன்ற தலைவர் புகழேந்தி, வார்டு உறுப்பினர் ரம்யா, வக்கீல் அன்பரசு ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்