திருமருகல் பகுதியில் பரவலாக மழை
திருமருகல் பகுதியில் பரவலாக மழை பெய்தது.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியத்தில் 25 ஆயிரம் எக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யபட்டு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது 80 சதவீத அறுவடை பணிகள் முடிவடைந்து விட்டன. இந்த நிலையில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. மேலும் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அறுவடை எந்திரங்கள் செல்லமுடியாமல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. நெற்பயிர்கள் நீரில் சாய்ந்து அழுகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.