பக்தர்கள் பால்குட ஊர்வலம்

சேனாதி தேவன்காடு பிடாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குட எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

Update: 2022-03-06 17:02 GMT
வாய்மேடு:
 வாய்மேடு சேனாதி தேவன்காடு பிடாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஆலடிமாரியம்மன் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்