கள்ளக்குறிச்சி அருகே வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்திய வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி அருகே வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்திய வாலிபர் கைது மாமனார் மாமியார் மீது வழக்கு

Update: 2022-03-06 17:02 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் மகன் மனோஜ்குமார்(வயது 21). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த முனியன் மகள் சிம்ரன்(21) என்ற பெண்ணை காதலித்து கடந்த 26-5-2021 அன்று திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணம் மனோஜ்குமாரின் தாய் ராஜகுமாரி, தந்தை சந்திரசேகரன் ஆகியோருக்கு பிடிக்கவில்லை. இவர்களின் பேச்சைக் கேட்டு மனோஜ்குமார் அவரது மனைவியிடம் உன் தாய் வீட்டில் நகை மற்றும் பணம் வாங்கி வா என்று வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

பின்னர் கடந்த 14-1-2022-ந் தேதி மீண்டும் மனோஜ்குமார் மற்றும் இவருடைய தாய், தந்தை ஆகிய 3 பேரும் ஒன்று சேர்ந்து சிம்ரனிடம் 5 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் வாங்கி வரும்படி அசிங்கமாக திட்டி கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதுபற்றி சிம்ரன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் மனோஜ்குமார், மாமியார் ராஜகுமாரி, மாமனார் சந்திரசேகரன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து மனோஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்