தொழில்சார் வல்லுனர்களுக்கு பயிற்சி
நாகையில் தொழில்சார் வல்லுனர்களுக்கு பயிற்சி நடந்தது.
வெளிப்பாளையம்:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் புத்தாக்கத் திட்டம் நாகை மற்றும் தலைஞாயிறு வட்டாரங்களிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்பனார்கோவில் மற்றும் சீர்காழி வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த 4 வட்டாரங்களில் 147 ஊராட்சிகளிலும் ஊராட்சிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட்ட 25 முதன்மை தொழில்சார் வல்லுனர்களுக்கு மாவட்ட அளவிலான தொழில்சார் சமூக வல்லுனர்களுக்கான திட்ட பயிற்றுனர் பயிற்சி நாகை ஒன்றியம் தெத்தி ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் நடந்தது. இதில் தெத்தி ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட மேலாளர் சவுந்தரராஜன் ஆகியோர் பயிற்சியை தொடங்கி வைத்து பேசினர். ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட செயல் அலுவலர் சுந்தரபாண்டியன் பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார்.