உளுந்தூர்பேட்டை அருகே கார் திருட முயன்ற வாலிபர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே கார் திருட முயன்ற வாலிபர் கைது
உளுந்தூர்பேட்டை
திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் பாதூர் பகுதியில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அங்குள்ள தனியார் பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாடகை கார் ஒன்றை மர்ம நபர் கள்ளச்சாவி போட்டு திருட முயன்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் அந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த முடியப்பன் மகன் மகிமை ராஜ்(வயது 28) என்பதும், காரை திருட முயன்றபோது பிடிபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.