கூத்தாநல்லூர் பகுதிகளில் பரவலாக மழை
கூத்தாநல்லூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
கூத்தாநல்லூர்:-
கூத்தாநல்லூர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது, சில நிமிடங்கள் மட்டுமே வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. மேலும், பகல் பொழுது முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. இந்த நிலையில் நேற்று குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், தண்ணீர்குன்னம், வடபாதிமங்கலம், ஓகைப்பேரையூர், ராமநாதபுரம், திருராமேஸ்வரம், கோரையாறு, ஓவர்ச்சேரி, குடிதாங்கிச்சேரி, குலமாணிக்கம், நாகங்குடி, பழையனூர், அதங்குடி, வெள்ளக்குடி, வாழச்சேரி, மரக்கடை, விழல்கோட்டகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் சம்பா, தாளடி அறுவடை பணிகளில் பாதிப்பு ஏற்பட்டதாக அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறினர்.