கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்

வாரவிடுமுறைையயொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Update: 2022-03-06 15:54 GMT
கொடைக்கானல்:
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் வார விடுமுறை தினத்தையொட்டி கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதில் நேற்று அதிகாலை முதல் நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் அப்சர்வேட்டரி ரோஜா பூங்கா பகுதியில் சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தியதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து வாகன ஓட்டிகளும், போலீசாரும் போக்குவரத்தை சீரமைத்தனர். மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக்ஸ் ஆகிய இடங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி, ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரி போன்றவற்றில் உற்சாகமாக ஈடுபட்டனர் இருப்பினும் பகல் முழுவதும் கடுமையான வெப்பமும், பிற்பகல் முதல் கடும் குளிரும் நிலவியது.
இதனால் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இருப்பினும் அதிக சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்