வேன் மோதி ஓட்டல் ஊழியர் பலி

வேடசந்தூர் அருகே வேன் மோதி ஓட்டல் ஊழியர் பலியானார்.

Update: 2022-03-06 14:50 GMT
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள விராலிப்பட்டியை சேர்ந்தவர் செல்வமுருகன் (வயது 24). இவர் வேடசந்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை வேலை முடிந்ததும் செல்வமுருகன், தனது சொந்த ஊரான விராலிப்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வேடசந்தூர்-புதுரோடு சாலையில் காளனம்பட்டி பகுதியில் அவர் வந்தபோது, எதிரே வந்த வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட செல்வமுருகன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வமுருகன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்