புதுச்சேரி நோணாங்குப்பம் கடற்கரை பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் சீற்றம்

பலத்த காற்று காரணமாக பாரடைஸ் பீச்சில் அமைக்கப்பட்டுள்ள நிழற்கூரைகள் மற்றும் கூடாரம் சேதமடைந்துள்ளன.

Update: 2022-03-06 13:59 GMT
புதுச்சேரி,

தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிலுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி நோணாங்குப்பம் கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசியதால், கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

நோணாங்குப்பம் பாரடைஸ் பீச்சில் சுற்றுலா பயணிகள் இளைப்பாற பல்வேறு நிழற்கூரைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பலத்த காற்று காரணமாக பாரடைஸ் பீச்சில் அமைக்கப்பட்டுள்ள நிழற்கூரைகள் மற்றும் கூடாரங்கள் சேதமடைந்துள்ளன. 

மேலும் செய்திகள்