ஆழித்தேரோட்ட விழா ஏற்பாடுகள் தயார் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தகவல்
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
திருவாரூர்:-
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
ஆழித்தேரோட்டம்
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழா வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதனையொட்டி ஆழித்தேர் கட்டுமான பணிகளையும், தேரோட்ட முன்னேற்பாடு பணிகளையும் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டமானது வருகிற 15-ந் தேதி நடக்கிறது. ஆழித்தேரோட்ட முன்னேற்பாடுகளும், கமலாலயகுளம் தென்கரை பகுதி சீரமைப்பு பணிகளும் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன.
ஏற்பாடுகள் தயார்
தேரோட்டத்தையொட்டி நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகள் விரைவில் நிறைவுபெறும். ஆழித்தேரோட்ட விழா சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், நகரசபை உறுப்பினர்கள் பிரகாஷ், செந்தில், தாசில்தார் அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.