தேனியில் ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு

தேனியில் ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.;

Update: 2022-03-06 12:57 GMT
தேனி:
தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பொருட்களின் இருப்பு, அரிசி உள்ளிட்ட பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் செயல்பாடுகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். கடையில் பொருட்கள் வாங்க வந்த மக்களிடம் ரேஷன் கடையின் செயல்பாடுகள், பணியாளர்களின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி உடனிருந்தார்.

மேலும் செய்திகள்