10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறிய பெயிண்டர் போக்சோ சட்டத்தில் கைது

10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறிய பெயிண்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-06 10:47 GMT
சென்னை சாலிகிராமம் விஜயராகவபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 41). பெயிண்டரான இவர், ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணிக்காக கடந்த 20-ந் தேதி சென்றார். அப்போது அந்த வீட்டில் உள்ள 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி, தான் சிலம்பம் கற்கும் கம்புக்கு பெயிண்ட் அடித்து தருமாறு கேட்டார். 

பழனி பெயிண்ட் அடித்து தருவதாக கூறி சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதுகுறித்து ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் தலைமறைவாக இருந்த  பழனியை ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்