கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2022-03-05 22:22 GMT
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள மஞ்சினி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 26). தொழிலாளி. இவர் நேற்று இரவு 9 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் ஆத்தூரில் இருந்து மஞ்சினிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக சக்திவேல் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் இறந்த சக்திவேலுக்கு கலா என்ற மனைவியும், 9 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்த விபத்து குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்