கொங்கணாபுரத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம்

கொங்கணாபுரத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

Update: 2022-03-05 22:15 GMT
எடப்பாடி:
கொங்கணாபுரத்தில் இயங்கிவரும் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். பி.டி. ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.8 ஆயிரத்து 900 முதல் ரூ.10 ஆயிரத்து 399 வரையும், டி.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரத்து 500 முதல் ரூ.12 ஆயிரத்து 99 வரை விற்பனையானது. மொத்தம் 3500 மூட்டைகள் 850 லாட்டுகளாக வைக்கப்பட்டு ரூ.1 கோடியே 10 லட்சத்துக்கு ஏலம் போனது. 

மேலும் செய்திகள்