கிணற்றில் இருந்த பாம்பை பிடித்த வாலிபர்

கிணற்றில் இருந்த பாம்பை பிடித்த வாலிபர்

Update: 2022-03-05 21:08 GMT
சோழவந்தான்
சோழவந்தான் அருகே திருவேடகம் காலனி எதிரே ஞானமணி என்பவருக்கு சொந்தமான தேங்காய் கிட்டங்கி உள்ளது. இங்குள்ள கிணற்றில் சுமார் 4 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு இருப்பதை பார்த்த பணியாளர்கள் இதுபற்றி ஞானமணிக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் ஞானமணி பாம்பு பிடிக்கும் யுவராஜ்(வயது 33) என்பவரை தொடர்புகொண்டு பாம்பை பிடிக்க வருமாறு கூறினார். இதையடுத்து, நேற்று யுவராஜ் அங்கு வந்து அந்த கிணற்றில் கயிறு கட்டி இறங்கினார். பின்னர் அவர் விஷத்தன்மை உடைய கண்ணாடி விரியன் பாம்பை லாவகமாக பிடித்து மேலே கொண்டு வந்தார். இதை வாடிப்பட்டி அருகே உள்ள வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைப்பதாக தெரிவித்தார். கிணற்றில் இருந்த விஷப்பாம்பை துணிச்சலுடன் பிடித்த யுவராஜை கிராமமக்கள் பாராட்டினர். 

மேலும் செய்திகள்