4 கிலோ கஞ்சா கடத்தியதாக வடமாநில வாலிபர்கள் 3 பேர் உள்பட 8 பேர் கைது
4 கிலோ கஞ்சா கடத்தியதாக வடமாநில வாலிபர்கள் 3 பேர் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை
4 கிலோ கஞ்சா கடத்தியதாக வடமாநில வாலிபர்கள் 3 பேர் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா பொட்டலங்கள்
பெருந்துறை அருகே உள்ள சிலேட்டர் அன்பு நகர் பகுதியில் காரில் கஞ்சா கடத்தப்படுவதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உஷாரான பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அன்பு நகர் பகுதியில் ரோந்து சென்றார்கள். அப்போது அங்கு ஒரு காரின் அருகே 8 பேர் நின்றுகொண்டு இருந்தார்கள். ேபாலீசாரை பார்த்ததும் 8 பேரும் அங்கிருந்து ஓட முயன்றார்கள். உடனே போலீசார் அவர்களை அனைவரையும் சுற்றிவளைத்து பிடித்தனர்.
பின்னர் காருக்குள் சோதனை செய்து பார்த்தபோது அதில் 4 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
8 பேர் கைது
இதையடுத்து போலீசார் பிடிபட்ட 8 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள்
ஈரோடு வேப்பம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 46), திருச்சி உறையூரை சேர்ந்த அப்துல்ரகுமான் (43), சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த மற்றொரு அப்துல் ரகுமான் (52), பெருந்துறை காஞ்சிக்கோவிலை சேர்ந்த தர்மராஜ் (33), திருப்பூர் சர்க்கார்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி (60) மற்றும் பீகாரை சேர்ந்த ஹேமில் ஷா (25), ஜிதேந்தர் சகானி (27), நரேஷ் சகானி (37) ஆகியோர் என்பதும் அவர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து 4 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி வந்து பெருந்துறை பகுதியில் விற்க முயன்றதும் தெரிந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் 8 பேரையும் கைது செய்து, அவர்கள் வைத்திருந்த 4 கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தார்கள்.