வி.கைகாட்டி:
கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூமிவேல் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மண்ணுழி வடக்கு தெருவைச் சேர்ந்த கோவிந்தராசு(வயது 54), சுப்புராயபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த காசிநாதன் மகன் ராமச்சந்திரன்(34) ஆகியோர் தேளூர் ஜி.கே.எம். நகர் மற்றும் மண்ணுழி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.