விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-05 20:19 GMT
மீன்சுருட்டி:

வாலிபர்களிடம் விசாரணை
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்த காடுவெட்டி பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை சந்தேகப்படும்படியாக 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இது பற்றி தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் அங்கு சென்று, 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள நாட்டார்மங்களம் கிராமத்தை சேர்ந்த உதயகுமாரின் மகன் பிரவீன்குமார்(வயது 24), அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள காடுவெட்டி மெயின்ரோடு தெருவை சேர்ந்த நாகராஜனின் மகன் சிற்றரசன்(21), காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள அறந்தாங்கி கிராமத்தை சேர்ந்த சின்னப்பன் மகன் சலேத் ஆரோக்கியராஜ்(21) என்பது தெரியவந்தது.
3 பேர் கைது
மேலும் பிரவீன்குமார் கடலூர் மாவட்டத்தில் உள்ள லால்பேட்டையில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வதும், அவர்கள் 3 பேரும் ஒரு கிலோ எடை உள்ள சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சாவை விற்பனைக்காக வைத்து இருந்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்