வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
தூய்மை பணியாளர்
நெல்லை மேலப்பாளையம் எம்.எம்.காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் வீரமணிகண்டன் (வயது 24). இவர் மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சரியாக வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்த வீரமணிகண்டனை பெற்றோர் கண்டித்தனர். இதனால் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி
திசையன்விளை அருகே உள்ள சிவந்தியாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஈஸ்வரன் (37). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்து ஏற்பட்டு உள்ளது. அதன்பிறகு அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும், உடல்நலம் சீராகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி பால்கனி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த ஈஸ்வரனுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.