25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
விருதுநகர் மாவட்டத்தில் நடந்த முகாமில் 25 ஆயிரம் ேபருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 23-வது தடுப்பூசி முகாம் 513 மையங்களில் நடைபெற்றது. இதில் முதல் தவணையாக 2,249 பேருக்கும், 2-வது தவணையாக 18,769 பேருக்கும், 3-வது தவணையாக 4,508 பேருக்கும் ஆக மொத்தம் 25,129 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் 27 லட்சத்து 95 ஆயிரத்து 155 பேருக்கு போடப்பட்டுள்ளது. மொத்தம் 91.96 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மாவட்டம் நிர்வாகம் கூறியுள்ளது.