மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.

Update: 2022-03-05 19:04 GMT
ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள நல்லூரைச் சேர்ந்த சண்முகையா மகன் அருண் பாலா (வயது 22). இவர் காசியாபுரம் விலக்கில் உள்ள கார் பழுது நீக்கும் மையத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று கார் ஒன்றை தண்ணீர் கொண்டு கழுவிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை சக தொழிலாளர்கள் மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அருண் பாலா பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்