கொத்தனாரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

கொத்தனாரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-03-05 19:02 GMT
குளித்தலை, 
குளித்தலை அருகே உள்ள நடுப்பட்டிபாலம் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (வயது 42), கொத்தனார். இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த மதிமுருகன், நாராயணசாமி, வீரமணி ஆகியோர் அங்கு வந்துள்ளனர். அப்போது மதிமுருகன் தனது கிணற்றின் அருகே மோட்டார் வைப்பதற்காக கொத்தனார் வேலை இருப்பதாக கூறி தனசேகரை அழைத்துள்ளார். ஆனால், தனக்கு வேறு இடத்தில் வேலை இருப்பதாக கூறி தனசேகர் வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மதிமுருகன் உள்பட 3 பேர் தனசேகரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். 
இதில், வலி தாங்க முடியாமல் தனசேகர் சத்தம் போடவே அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதனை கண்டு பீதியடைந்த அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தனசேகர் அளித்த புகாரின் பேரில் மதிமுருகன், நாராயணசாமி, வீரமணி ஆகிய 3 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்