காரில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

காரில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-03-05 19:00 GMT
நெல்லை:

நெல்லை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று நெல்லை -தென்காசி ரோட்டில் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி விலக்கு பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு காரில் 12 மூட்டைகளில் 600 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, புதுப்பட்டியைச் சேர்ந்த சேகர் மகன் சக்திவேல் என்பவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்