ஆதரவின்றி தவித்து வரும் முதியவர்கள்

திருச்சி ரெயில் நிலையம் பகுதியில் முதியவர்கள பலர் ஆதரவின்றி தவித்து வருகின்றனர். உறவினர்களே அவர்களை அனாதையாக விட்டு செல்லும் அவலநிலை நீடித்து வருகிறது.

Update: 2022-03-05 18:58 GMT
திருச்சி, மார்ச்.6-
திருச்சி ரெயில் நிலையம் பகுதியில் முதியவர்கள பலர் ஆதரவின்றி தவித்து வருகின்றனர். உறவினர்களே அவர்களை அனாதையாக விட்டு செல்லும் அவலநிலை நீடித்து வருகிறது.
ஆதரவற்ற முதியவர்கள்
திருச்சி மாநகர பகுதிகளில் சமீபகாலமாக சாலையோரங்களில் ஆதரவற்ற முதியவர்களை அதிகமாக பார்க்க முடிகிறது. குறிப்பாக திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் முதியவர்கள் அதிகளவில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களில் சிலர் வீட்டில் இருக்க பிடிக்காமல்  ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளனர்.
சில முதியவர்களை அவர்களது உறவினர்களே ரெயில் நிலையத்தில் வந்து விட்டு விட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் ரெயில் நிலைய வளாகத்தில் ஆங்காங்கே முதியவர்கள் சுற்றித்திரிகின்றனர். இவர்கள் அங்கு வரும் பயணிகள் கொடுக்கும் உணவு பண்டங்களை சாப்பிட்டு பசியை போக்கிகொள்கின்றனர்.
வெயிலில்...
அதிலும் சில முதியவர்கள் உடல் நலம் மிகவும் மோசமான நிலையில் கவனிப்பாரற்று ஆங்காங்கே வெயிலில் படுத்துக் கிடக்கின்றனர். இவர்களின் நிலையை பார்க்கும் போது பார்ப்பவர்களின் மனது புண்படும் விதமாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகள் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்