அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது
தாயில்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.
தாயில்பட்டி,
தாயில்பட்டி அருகே உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன், விஜயகரிசல்குளம் பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினார். அப்போது அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வடக்கு தெருவைச் சேர்ந்த அந்தோணி (வயது 60) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 கிலோ சர வெடிகள் பறிமுதல் செய்தார்.