சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
ஏழாயிரம் பண்ணையில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
தாயில்பட்டி,
ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள கங்கரக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த எலுமிச்சங்காய்பட்டி கிராமத்தில் சனிக்கிழமையையொட்டி சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அச்சங்குளம் சீனிவாச பெருமாள் கோவில், ஏழாயிரம்பண்ணை காட்டுப் பெருமாள் கோவில், சிப்பிபாறை மலையில் உள்ள பெருமாள் கோவில், செவல்பட்டி மலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில், ரெட்டியபட்டி பெருமாள் கோவில், மேல தாயில்பட்டி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், கீழ தாயில்பட்டி பெருமாள் கோவில், கோமாளி பட்டி சீனிவாச பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் வாராந்திர சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.