சிலட்டூரில் வடமாடு மஞ்சுவிரட்டு
சிலட்டூரில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.;
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே சிலட்டூரில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மஞ்சுவிரட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 12 காளைகள் கலந்து கொண்டன. இதில் மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு காளைகளை அடக்கினர். பின்னர் வீரர்களிடம் பிடிபடாத காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு மஞ்சுவிரட்டை கண்டு களித்தனர்.