போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கடமலைக்குண்டு:
பெரியகுளம் அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டியை சேர்ந்த கண்ணுச்சாமி மகன் ரோகித்கண்ணா (வயது 25). இவர் பிளஸ்-2 படித்து வரும் 17 வயது மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று விட்டார். இதுகுறித்து வருசநாடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை எதிர்புறம் உள்ள பஸ் நிறுத்தத்தில் ரோகித்கண்ணாவும், மாணவியும் நின்று கொண்டு இருப்பதாக வருசநாடு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அவர்களை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்தியதாக போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோகித்கண்ணாவை கைது செய்தனர். மேலும் மாணவி தேனியில் உள்ள தனியார் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.