நடிகை சஞ்சனாவுக்கு அனுப்பிய ஆபாச குறுந்தகவலை அழித்த ஆதம்

நடிகை சஞ்சனாவுக்கு அனுப்பிய ஆபாச குறுந்தகவலை அழித்த ஆதம்

Update: 2022-03-05 16:27 GMT
பெங்களூரு: கன்னட திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சஞ்சனா கல்ராணி. இந்த நிலையில் பிரபல ஆடை வடிவமைப்பாளரும், நடன இயக்குனருமான பிரசாத் பிட்டப்பாவின் மகன் ஆதம், சஞ்சனா கல்ராணிக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் பெங்களூரு இந்திராநகர் போலீசார் ஆதமை கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், ஆதமின் செல்போனை வாங்கி சோதனை செய்தனர். அப்போது அவர் சஞ்சனாவுக்கு அனுப்பிய ஆபாச குறுந்தகவலை அழித்தது தெரியவந்தது. அந்த ஆபாச குறுந்தகவலை மீண்டும் எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஆபாச குறுந்தகவல் அனுப்பி தனக்கு தொடர்ந்து ஆதம் தொல்லை கொடுத்ததாக சஞ்சனா மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்