பழுதாகி நின்ற அரசு பஸ்; பயணிகள் அவதி
திண்டுக்கல்லில் அரசு பஸ் பழுதாகி நின்றது.
வேடசந்தூர்:
திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் வழியாக கரூர் மாவட்டம் பள்ளப்பட்டிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அந்த பஸ் நேற்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திண்டுக்கல்லில் இருந்து பள்ளப்பட்டி நோக்கி புறப்பட்டு வந்தது.
வேடசந்தூர் பஸ் நிலையத்தில், நுழைவு வாயில் அருகே அந்த பஸ் வந்தபோது திடீரென்று பழுதாகி நின்றது. இதனால் அந்த பஸ்சில் வந்த பயணிகள் அவதியடைந்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக அங்கு பஸ் நின்றதால், அதில் வந்த பயணிகள் மாற்று பஸ்களில் ஏறி சென்றனர்.
மேலும் நுழைவு வாயிலில் பஸ் பழுதாகி நின்றதால் மற்ற பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் செல்லமுடியவில்லை. இதையடுத்து வேடசந்தூர் பணிமனையில் இருந்து ஊழியர்கள் வந்து, அந்த பஸ்சில் பழுது நீக்கினர். பின்னர் அந்த பஸ் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.