திண்டுக்கல்லில் போலீசாரின் மினி மாரத்தான்

திண்டுக்கல்லில் போலீசாரின் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

Update: 2022-03-05 16:23 GMT
திண்டுக்கல், மார்ச்.6-
திண்டுக்கல்-நத்தம் சாலையில் சிறுமலை பிரிவில் போலீசார் சார்பில் மினி மாரத்தான் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி, மினி மாரத்தானை தொடங்கி வைத்தார்.
இதில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டு ஓடினர். அவர்களுடன் போலீஸ் சூப்பிரண்டும் பங்கேற்று ஓடினார். சிறுமலை பிரிவில் இருந்து தொடங்கிய மினி மாரத்தான் சிறுமலை அடிவாரத்தில் நிறைவுபெற்றது. இறுதியில் திண்டுக்கல் தாலுகா தனிப்பிரிவு ஏட்டு வினோத்துக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இதில் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர்கள் டேவிட், பால்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்