போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் முதலியார்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் அசோகன் (வயது53). தொழிலாளி. இவர் வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இதை வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்று சிறுமியை மிரட்டி உள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் தாயார் வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்க்கொடி மற்றும் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அசோகனை கைது செய்தனர்.