சேந்தமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல்; துப்புரவு ஆய்வாளர் சாவு வாலிபர் படுகாயம்

சேந்தமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல்; துப்புரவு ஆய்வாளர் சாவு வாலிபர் படுகாயம்

Update: 2022-03-05 16:04 GMT
சேந்தமங்கலம்:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சியில் துப்புரவு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாலு (வயது 52). மோகனூரை சேர்ந்த இவருக்கு சண்முகவடிவு (46) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். 
பாலு நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் நாமக்கல் சென்று விட்டு இரவு 11 மணி அளவில் சேந்தமங்கலம் அருகே அக்கியம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தார். 
அப்போது எதிரே வடுகப்பட்டியை சேர்ந்த கமல்நாத் (19) என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளும், பாலு ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் பாலுைவ மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கும், கமல்நாத்தை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பாலு பரிதாபமாக இறந்தார். கமல்நாத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்