வேகத்தடை அமைக்கப்படுமா?
வலங்கைமான் அருகே விருப்பாச்சிபுரம் கிராமத்தில் வேகத்தடை அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வலங்கைமான்:
வலங்கைமான் அருகே விருப்பாச்சிபுரம் கிராமத்தில் வேகத்தடை அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருப்பாச்சிபுரம் கிராமம்
வலங்கைமான் பேரூராட்சி எல்லைப்பகுதியில் விருப்பாச்சிபுரம் கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ்கிராமத்தில் தொடக்கப்பள்ளி பிரிவு சாலை உள்ளது. இந்த சாலையில் வேகத்தடை இல்லை. இந்த சாலையை அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள், மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.
அடிக்கடி விபத்து
இந்த சாலை பகுதியில் விருப்பாச்சிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கூட்டுறவு அங்காடி, கிராம நிர்வாக அலுவலகம், தமிழ்நாடு வாழ்வாதார இயக்க வட்டார அலுவலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளது. இந்த அலுவலகங்களுக்கும், பள்ளிக்கும் தினமும் மாணவர்கள், அலுவலர்கள் சென்று வருகின்றனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலையில் வேகத்தடை இல்லாததால் வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படுமோ? என்ற அச்சம் பெற்றோர்களிடம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வலங்கைமான் அருகே விருப்பாச்சிபுரம் கிராமத்தில் தொடக்கப்பள்ளி பிரிவு சாலையில் விபத்தை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைத்து தர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
----