மீளவிட்டான்- மேலமருதூர் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்
தூத்துக்குடி மீளவிட்டான்- மேலமருதூர் இடையே புதிதாக அமைக்கப்பட்டு உள்ள ரெயில் பாதையில் நேற்று அதிவேக ெரயில் சோதனை ஓட்டம் நடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மீளவிட்டான்- மேலமருதூர் இடையே புதிதாக அமைக்கப்பட்டு உள்ள ரெயில் பாதையில் நேற்று அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது.
புதிய பாதை
மதுரை - தூத்துக்குடி இடையே புதிய அகல ெரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக தூத்துக்குடி மீளவிட்டான் ெரயில் நிலையத்தில் இருந்து மேலமருதூர் வரை 17 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக ெரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ெரயில் பாதையை பெங்களூரு தென் சரக ெரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் நேற்று ஆய்வு செய்தார்.
மீளவிட்டான் ெரயில் நிலையத்தில் இருந்து காலை 10 மணிக்கு 5 மோட்டார் டிராலிகள் மூலமாக ஆய்வை தொடங்கினார். அப்போது வழியில் 32 சிறிய, பெரிய பாலங்கள், குமாரகிரி ெரயில்வே கேட், ெரயில் பாதையை குறுக்கிடும் பல்வேறு மின் வழித்தடங்கள், ெரயில் பாதையின் பெரிய வளைவுகள் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார். மேலமருதூர் ெரயில் நிலையத்தில் மதியம் 2.30 மணிக்கு ஆய்வு பணியை நிறைவு செய்தார்.
சோதனை ஓட்டம்
ஆய்விற்கு பின்னர் சிறப்பு ரெயில் மூலம் 120 கிலோமீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. மேலமருதூரில் மாலை 3.23 மணிக்கு புறப்பட்ட இந்த சிறப்பு ெரயில் 3.36 மணிக்கு 13 நிமிடங்களில் மீளவிட்டான் வந்து சேர்ந்தது.
இந்த ஆய்வு பணியில் ரெயில்வே கட்டுமான தலைமை நிர்வாக அதிகாரி பிரபுல்ல வர்மா, முதன்மை பொறியாளர் தவமணி பாண்டி, கோட்ட ெரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.