பொள்ளாச்சி மார்க்கெட்டில் வெற்றிலை ஒரு கட்டு ரூ 3200 க்கு விற்பனை
பொள்ளாச்சி மார்க்கெட்டில் வெற்றிலை ஒரு கட்டு ரூ.3 ஆயிரத்து 200-க்கு விற்பனை ஆனது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி மார்க்கெட்டில் வெற்றிலை ஒரு கட்டு ரூ.3 ஆயிரத்து 200-க்கு விற்பனை ஆனது.
வெற்றிலை ஏலம்
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் சனி மற்றும் செவ்வாய் கிழமைகளில் வெற்றிலை ஏலம் நடந்துவருகிறது. ஏலத்திற்கு பொள்ளாச்சி, சமத்தூர், கோட்டூர், வேட்டைக்காரன்புதூர், சோமந்துறை சித்தூர் உள்பட பல்வேறு கிராமங்கள் மற்றும் திருச்செந்தூர், உடன்குடி, திருச்சி உள்பட பல இடங்களில்இருந்து வெற்றிலை கட்டுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. வெற்றிலை சாகுபடி செய்யப்பட்ட பல இடங்களில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில், அதிகாலை பனி ஆகியவையால் வெற்றிலைகள் பல கொடியில் காய்ந்து சேதமடைந்துவிடுகிறது. இதனால் பொள்ளாச்சி மார்க்கெட்டில் வெற்றிலை கட்டுகள் வரத்து மிக குறைந்த அளவிலேயே கடந்த சில வாரங்களாக உள்ளது.
ரூ.3 ஆயிரத்து 200
நேற்று நடந்த ஏலத்திற்கும் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து, வெற்றிலை கட்டுகள் வரத்து மிககுறைவாக இருந்தது. கடந்த வாரம் ஒருக்கட்டு அதிகபட்சமாக ரூ.2 ஆயிரத்து 800-க்கு ஏலம்போனது. ஆனால் நேற்று 6 ஆயிரத்து 500 எண்ணிக்கைகள் கொண்ட ஒருக்கட்டு குறைந்தபட்சமாக ரூ.2 ஆயிரத்து 300 முதல் அதிகபட்சமாக ரூ.3 ஆயிரத்து 200 வரை விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.வரத்து குறைவாக இருந்ததால் வியாபாரிகள் வெற்றிலையை போட்டி போட்டு வாங்கிச்சென்றனர்.