ஏரிப்பட்டி அரசு பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாட்டம்

ஏரிப்பட்டி அரசு பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2022-03-05 13:19 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. கோவை மண்டல அறிவியல் மையத்தின் (ஆன்லைன்) இணைய வழிவகுப்பில் ராமன் விளைவு பற்றி விளக்கப்பட்டது. வானமும், கடலும் ஏன் நீல நிறமாக தெரிகிறது என காரணம்விளக்கிக் கூறப்பட்டது. அனைத்து மாணவர்களும் இணைய வழியில் அறிந்து கொண்டனர். தலைமையாசிரியர் சுகந்தி ஏன், எதற்கு, எப்படி? என்று அறிவியல் விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு தலைமை தாங்கி மாணவர்களுடன் உரையாடினார்.  அனைத்து மாணவர்களும் விஞ்ஞானி சர். சி. வி.ராமன் முகமூடி அணிந்து அறிவியல் பரப்புவோம், அறிவியல் அறிவோம், அறிவியல் தெளிவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அறிவியல் கண்காட்சியில் மாணவர்களின் எளிய அறிவியல் சோதனைக்கான படைப்புகள், மாதிரிகளையும் கண்காட்சிபடுத்தி விளக்கினர். இதனை தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய நான் முதல்வன் திறன் மேம்பாட்டுபயிற்சி பற்றி விளக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்