மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதல் வகுப்பு மாணவர் பலி

மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதல் வகுப்பு மாணவர் பலி

Update: 2022-03-05 13:16 GMT
திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் அருகே கரையூரை சேர்ந்தவர்  ராஜாமுகமது. இவருடைய மனைவி  கவுத்நிஷா. இவர்களின் மகன் இஸ்மாயில் வயது 16. இவர் மூலனூரில் உள்ள  தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் இஸ்மாயில் தனது நண்பர் இக்பால்26 என்பவருடன் மோட்டார்சைக்கிளில்  தாராபுரம் வந்து கொண்டிருந்தார் மோட்டார் சைச்கிளை இக்பால் ஓட்டினார். பின் இருக்கையில் இஸ்மாயில் அமர்ந்து இருந்தார். 
இவர்களுடைய மோட்டார்சைக்கிள் தாராபுரம் கரூர் சாலையில்  நேற்று மதியம் 2 மணிக்கு காளிபாளையம் பஸ் நிறுத்தம அருகே வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக காளிபாளையம்  பகுதியை சேர்ந்த சம்பூர்ணம்45 என்ற பெண் மொபட்டில்  சாலையை கடக்க முயன்றார். இந்த மொபட் மீது ேமாட்டார்சைக்கிள் மோதாமல் இருக்க இக்பால் மோட்டார்சைக்கிளின் பிரேக் பிடித்தார். 
இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென்று சம்பூர்ணம் ஓட்டி வந்த மொபெட் மீது பலத்த சத்தத்துடன் மோதியது. இந்த விபத்தில் ேமாட்டார் சைக்கிளை ஓட்டி வந்த இக்பால், மற்றும் இஸ்மாயில், மொபட்டை ஓட்டி வந்த சம்பூர்ணம் ஆகியோர் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். 
மாணவன் பலி
 இந்த விபத்தை பார்த்ததும்  அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து காயம் அடைந்த  3 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவர் இஸ்மாயிலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காயம் அடைந்த இக்பால் மற்றும் சம்பூர்ணம் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று மாணவன் இஸ்மாயில் உடலை மீட்டு பிரேத பரிசோதனை அறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்