தேசிய சிலம்ப போட்டியில் கயத்தாறு மாணவி சாதனை
தேசிய சிலம்ப போட்டியில் கயத்தாறு மாணவி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே வில்லிசேரி பஞ்சாயத்து மெய்த்தலைவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி- லட்சுமி தம்பதி மகள் கார்த்திகா. கல்லூரி மாணவியான இவர், கன்னியாகுமரியில் நடைபெற்ற 18-வது தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்சிப் போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
பின்னர் சொந்த ஊருக்கு திரும்பிய மாணவிக்கு வில்லிசேரி பஞ்சாயத்து சார்பிலும், ஊர் பொதுமக்கள் சார்பிலும், வாணவேடிக்கை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.