ஆழியாறு அணை பூங்காவில் திடீர் தீ

ஆழியாறு அணை பூங்காவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

Update: 2022-03-05 13:15 GMT
பொள்ளாச்சி

ஆழியாறு அணை பூங்காவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

அழியாறு அணை பூங்கா

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறில் இயற்கை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் நிறைந்த அணை பூங்கா உள்ளது. இதை சுற்றிப்பார்க்க தினமும் கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட பல இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை வெயிலின் தாக்கம் தொடங்கி இருப்பதால் அணைப் பகுதியில் உள்ள புற்கள், செடிகள் காய்ந்து உள்ளது. 
இதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு பொதுப்பணித்துறையினர் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தி வருகின்றனர்.

மளமளவென பரவிய தீ

இந்த நிலையில், நேற்று மதியம் சுற்றுலா பயணி ஒருவர் புகை பிடித்து விட்டு பூங்கா பகுதியில் சிகரெட்டை தூக்கி எரிந்ததில் புற்களில் தீவிபத்து ஏற்பட்டு உள்ளது. மளமளவென பரவிய தீ பற்றி எரிந்து கொண்டு இருந்தது. இதுபற்றி பொதுமக்கள் ஆழியாறு போலீஸ் நிலையம் மற்றும் பொள்ளாச்சி தீயணைப்பு. மற்றும் மீட்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். மேலும், தீ பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். பூங்காவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஆழியாறு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

மேலும் செய்திகள்