வைகுண்ட சுவாமி சப்பர பவனி

உடன்குடி சந்தையடியூரில் வைகுண்ட சுவாமி சப்பர பவனி நடந்தது.

Update: 2022-03-05 12:09 GMT
உடன்குடி;
உடன்குடி சந்தையடியூர் தாகம் தனித்த பதியில் அய்யா வைகுண்ட சுவாமி 190-வது அவதார தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி நடந்த ஊர்வலத்திற்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும் 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அய்யாவழி தர்மயுக அறக்கட்டளை சார்பில் இலவசமாக சேலை வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அய்யா வைகுண்டர் சப்பர பவனி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவையொட்டி காலை, மாலை, இரவு என 3 வேளையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அன்புக் கொடி மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்