தேங்கி நிற்கும் கழிவு நீர்
திருப்பூர் போயம்பாளையம் அய்யப்பா நகரில் உள்ள சாக்கடை வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அடைப்பு ஏற்பட்டு 3 வாரங்கள் ஆன நிலையிலும் அடைப்பை சரி செய்யவில்லை. இதனால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லையும் அதிகரித்து பொதுமக்களுக்கு காய்ச்சல் போன்ற நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் சாக்கடை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குழாய் உடைந்து வீணாக செல்லும் குடிநீர்
திருமுருகன்பூண்டி பூலுவபட்டி ரிங் ரோடில் தண்ணீர் குழாய் உடைந்து கடந்த இரண்டு மாதங்களாக தண்ணீர் வெளியேறிக் கொண்டு இருக்கிறது. அந்த தண்ணீர் சாலையோரங்களில் தேங்கி கழிவு நீருடன் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்களும் மற்ற கிருமிகளும் உருவாகி தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது. வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். சில சமயங்களில் விபத்து நடப்பதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்துகுடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.