கோவை வேளாண் கல்லூரி மாணவர்கள் களப்பயிற்சி
கோவை வேளாண் கல்லூரி மாணவர்கள் களப்பயிற்சி
பொங்கலூரை அடுத்த காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்களால் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் அங்கக முறையில் விதை நேர்த்தி மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. காட்டூரை சேர்ந்த விவசாயி கந்தசாமி என்பவரது விவசாய பண்ணையில் செயல் விளக்கம் நடந்தது. இதில் விவசாயிகள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரைசோபியம் மற்றும் டிரைகோடெர்மா விரிடி பயன்படுத்தி பச்சைப்பயறில் விதை நேர்த்தி செய்து காண்பித்ததுடன், விதை நேர்த்தியின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் வேளாண் கழிவுகளை வீணாக்காமல் முறையாக பயன்படுத்துவது குறித்தும், அதனைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்தல் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. நிறைவாக விவசாயிகள் தங்கள் சந்தேகங்களுக்கான விளக்கத்தைக் கேட்டறிந்தனர்.