வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு
உடுமலையில் வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று 15 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
நகை திருட்டு
உடுமலை மாணிக்கம் வீதி ரெயில்வே கேட் பகுதியைசேர்ந்தவர் ரவிசங்கர் (வயது31). இவர் எலக்ட்ரானிக் வியாபாரம் செய்து வருகிறார். கோவையில் இவருடைய உறவினர் இறந்ததையொட்டி நடந்த கடந்த மாதம் பிப்ரவரி 27ந் தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவைக்கு சென்றிருந்தார். அதன்பின்னர்
கடந்த 4-ந் தேதி இவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடப்பதாக வீட்டிற்கு பக்கத்தில் பழக்கடை வைத்திருப்பவர் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ரவிசங்கர் வீட்டிற்குவந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டுஉடைக்கப்பட்டிருந்தது. பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைத்திருந்த 8 பவுன் சங்கிலி, 4 பவுன் முருக்கு சங்கிலி மற்றும் மோதிரம், தோடு என மொத்தம் 15 பவுன் தங்க நகைள் திருட்டு போனது தெரியவந்தது. ரவிசங்கர் கோவை சென்றதை அறிந்து ெகாண்டு ஆசாமிகள் அங்கு சென்று வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து உடுமலை போலீசில் புகார் செய்தார். இதையொட்டி உடுமலை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.வி.சுஜாதா வழக்குப்பதிவு செய்து, நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்.