கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ஷகிலா அறிவழகன் 9 ஓட்டுகள் பெற்று வெற்றி

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ஷகிலா அறிவழகன் 9 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

Update: 2022-03-05 03:52 GMT
கும்மிடிப்பூண்டி,  

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் 2-வது வார்டு உறுப்பினர் ஷகிலா அறிவழகன் அறிவிக்கப்பட்ட நிலையில், அவரை எதிர்த்து தி.மு.க.வை சேர்ந்த 7-வது வார்டு உறுப்பினரான துர்கேஸ்வரி பாஸ்கர் என்பவரும் போட்டியிட்டார். மொத்தம் உள்ள 15 வார்டு உறுப்பினர்களில் 9 பேர் ஷகிலா அறிவழகனுக்கும், 6 பேர் துர்கேஸ்வரி பாஸ்கருக்கும் வாக்களித்தனர். 

இதில் ஷகிலா அறிவழகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி பேரூராட்சி துணைத்தலைவர் பதவிக்கு தி.மு.க சார்பில் 5-வது வார்டு உறுப்பினரான கருணாகரனும், அ.தி.மு.க. சார்பில் 6-வது வார்டு உறுப்பினரான கேசவனும் போட்டியிட்டனர். 

இதில் கேசவன் 10 வாக்குகளையும், கருணாகரன் 5 வாக்குகளையும் பெற்றனர். இதனையடுத்து அ.தி.மு.க.வை சேர்ந்த கேசவன் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்