தர்மபுரியில் ஊழியர்கள் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம்
அரசு போக்குவரத்து கழகத்தை பாதுகாக்கக்கோரி தர்மபுரியில் ஊழியர்கள் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம்
தர்மபுரி:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி பாரதிபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு 24 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நேற்று தொடங்கியது. உண்ணாவிரத போராட்டத்தை மத்திய சங்க தலைவர் சண்முகம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் முரளி, முருகன், நாகராஜன், மயில்சாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். அரசு போக்குவரத்து கழகத்தை பாதுகாக்க வேண்டும். ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது.