மத்தூர் அருகே இளம்பெண் தற்கொலை
மத்தூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
மத்தூர்
மத்தூர் அருகே உள்ள கவுண்டனூரை சேர்ந்தவர் மாது. இவரது மனைவி ஐஸ்வர்யா (வயது 21). இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்தது. இதனால் மனமுடைந்த ஐஸ்வர்யா வீட்டில் தூக்கில் தொங்கினார்.
அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்சாண்டர் விசாரணை நடத்தி வருகிறார்.